தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம்
இன்று காலை 9:30 மணி அளவில் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில்cccநடந்தது. கூட்டணி கட்சிகளாக உள்ள விடுதலைச் சிறுத்தை கட்சியும் இந்திய முஸ்லிம்களுக்கு கட்சியும் அமைச்சரவையில் இடம்பெற்றன. வந்தே மாதரம் பாடல்களுடன் பதவி ஏற்பு நிகழ்வு தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஷாஜகான்,வன்னியரசு. இருவருக்கும்பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அதன் தலைவர் திருமாவளவன், இந்திய முஸ்லீம் கட்சி சார்பாக தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மிக எளிய முறையில் இப் பதவி ஏற்பு நிகழ்வு நடந்தேறியது.
Tags :



















