இன்ஸ்டா ஃபேமஸ் 9 வயது சிறுமி தற்கொலை

திருவள்ளூர்: பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-கற்பகம் தம்பதியினருக்கு ஒரு மகனும், 4ஆம் வகுப்பு படிக்கும் பிரதிக்ஷா (9) என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா இன்ஸ்டாகிராமில் பல பாடல்களுக்கு அசைவு கொடுத்து இன்ஸ்டா புகழ் சிறுமியாகவே பலரால் அறியப்பட்டு வந்தார். நேற்றிரவு பிரதிக்ஷா பாட்டி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் படிக்கும்படி கண்டித்து விட்டு, வெளியே சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது சிறுமி தூக்கிட்டு உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags :