முன்னாள் அமைச்சர் மகன் உள்ளிட்ட 7 பேர் கைது

by Editor / 27-11-2021 12:56:06pm
முன்னாள் அமைச்சர்  மகன்  உள்ளிட்ட 7 பேர் கைது


தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரி மூலம் கொண்டு வந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில்  பகுதியிலிருந்து  முந்திரி கொட்டைகள் ஏற்றிய கண்டெய்னர் லாரிஓன்று தூத்துக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த லாரியை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.அப்போது லாரி பொட்டாலூரணி விலக்கு அருகேசென்ற போது தீடீரென காரில் வந்த 7பேர் கொண்ட கும்பல், மறித்து டிரைவரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.கடத்தப்பட்ட முந்திரி மதிப்பு ரூ.1கோடியே 10 லட்சம் ஆகும். 

இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான வாட்ஸ் அப் குழுக்களிலும்,சமூக வலைத்தளங்களிலும் இந்த தகவல் பரவியது.இதையடுத்து ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனைத்துச் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய 
பின்னால் காரில் வந்த 7பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பண்டியன் மகன் ஜெயசிங் (45), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (30), முறப்பநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில் முருகன் (33), முள்ளக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (35), பிரையனட் நகர் 12வதுதெருவைச் சேர்ந்த சக்தி மகன் விஷ்னு (25), முறப்பநாட்டைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி (20), நெல்லை சமாதான புரத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26) ஆகிய 7 பேரையும்  காவல்துறை-யினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

முன்னாள் அமைச்சர்  மகன்  உள்ளிட்ட 7 பேர் கைது
 

Tags :

Share via

More stories

Logo