நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை

by Staff / 02-02-2024 11:53:31am
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை

தமிழகத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலையிலேயே என்ஐஏ (NIA) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை, நெல்லை, மதுரை, சென்னை, சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் சோதனை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

Tags :

Share via

More stories