விவேக் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு : மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி

விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார் நடிகர் மன்சூர் அலிகான். தடுப்பூசி குறித்து பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் புதிய மனு தொடர உத்தரவிட்டனர்.
Tags :