அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு.

காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளை இந்தியா வேட்டையாடும் என தெரிவித்தார். இந்நிலையில் ராஜ்நாத் சிங் - உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று (ஏப். 24) மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
Tags : அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு