அமெரிக்காவில் ஒரே நாளில் 71,809 பேருக்கு கொரோனா பாதிப்பு- 1,563 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று மட்டும் 1,563 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 748,652 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று 136,821 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மொத்தம் 35,710,331 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் 43,738 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,541,192. அந்நாட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று 223 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து 1,000-த்தை தாண்டியதாக உள்ளது. ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,740 ஆக பதிவாகி உள்ளது. ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,015 ஆகும். ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,060,752. ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 225,325. ரஷ்யாவுக்கு அடுத்ததாக ருமேனியாவில் 561 பேரும் உக்ரைனில் 538 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Tags :