டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க நீதிமன்றம் நோட்டீஸ்

by Staff / 20-11-2023 02:44:08pm
டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க நீதிமன்றம் நோட்டீஸ்

டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை பார்த்து பல இளைஞர்கள் கெட்டுப் போவதாக காவல்துறை கோரிக்கை விடுத்த நிலையில், நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் பைக்கில் சாகசம் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

 

Tags :

Share via

More stories