மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாலியல் தொல்லை அளித்த பிரிவில் வழக்குப்பதிய தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விஜய்யின் லியோ படத்தில் த்ரிஷா உடனான காட்சிகள் குறித்து பேசிய மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இயக்குநர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தான் பேசியதை தவறாக சித்தரித்து பரப்புவதாக மன்சூர் அலிகான் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.
Tags :