குடிபோதையில் தந்தைக்கு அரிவாள் வெட்டு... மகனுக்கு போலீஸ் வலைவீச்சு...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, குடிபோதையில் தந்தையை மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.
கலிங்கப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முருகன். இவருக்கும் விருதுநகரை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கூலித்தொழிலாளியான முருகன், வேலைக்கு செல்லாமல், ஊர் சுற்றியதால் அவரது மனைவி அவருடன் சண்டையிட்டுக்கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் தாய் வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு நேற்று தந்தையுடன் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரத்தில் தந்தையை அரிவாளால் வெட்டிய முருகன், தலைமறைவாகியுள்ளார். இதனிடையே படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கணேசனை மருத்துவமனையில் சேர்த்துள்ள போலீசார், முருகனை தேடி வருகின்றனர்.
Tags :