சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு...

by Admin / 04-08-2021 03:06:29pm
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு...



சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்ளிட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பை தீர்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
 
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 39வயதான கிருஷ்ணவேணி மற்றும் 37வயதான இளங்கோவன் உள்ளிட்ட இரண்டு பேர் 18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தள்ளனர்

.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை நவாஸ் மற்றும் மிண்ட் பகுதியை சேர்ட்ந்த ஸ்டாலின் என்பவர்களிடம் விற்பனை செய்துள்ளார்.அவர்கள் இருவரும் அந்த சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து குழந்தைகள் தடுப்பு பிரிவு சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேனி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ராஜலஷ்மி குற்றவாளிகளான கிருஷ்ணவேணி மற்றும் இளங்கோவன் உள்ளிட்டோருக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை சிறுமியை பாலியல் வன்கோடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டுக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும் இருவருக்கும் தலா 25ஆயிரம் ரூபாய்  அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
 
மேலும் சிறுமியை பாலியல் கொடுமை செய்த நவாஸ் மற்றும் ஸ்டாலினுக்கு தலா 7  வருட சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 

Tags :

Share via
Logo