நீலகிரி நிலச்சரிவு அபாயம் - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

by Admin / 12-11-2021 06:53:15pm
  நீலகிரி நிலச்சரிவு அபாயம் - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

நிலச்சரிவு அபாயம் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள்  நீலகிரி செல்லவேண்டாம் - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

சுற்றுலாப்பயணிகள் நவம்பர் 12 முதல் 16ஆம் தேதிவரை நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளவேண்டாம் என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக  நவம்பர் 13,14,15,16 ஆகிய தேதிகளில்  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் நீலகிரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும்,  கனமழை காரணமாக நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை அறிவிப்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo