ஆப்கன் நிலவரம் - பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலைவர் ஆலோசனை

by Editor / 12-09-2021 11:56:14am
ஆப்கன் நிலவரம் - பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலைவர் ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் தலிபான்ளின் ஆட்சி அமைந்துவிட்ட நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவர் ஜெனரல் பைஸ் ஹமீது முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சீனா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உளவுத் துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட எவ்வாறாக அண்டை நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து பாகிஸ்தானின் அப்ஸர்வர் செய்தித்தாளில், இந்த சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் இது குறித்து எந்த ஒரு நாடும் உறுதியான வெளிப்படையான தகவலை வெளியிடவில்லை.

முன்னதாக நேற்று சேனல் 4 செய்திச் சேனலுக்கு ஐஎஸ்ஐ தலைவர் ஜெனரல் ஃபையீஸ் சையது அளித்த பேட்டியில், நாங்கள் ஆப்கனில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த விரும்புகிறோம் என்று கூறினார்.

 

Tags :

Share via