அமெரிக்க அதிபரின் துாதர் இன்று இந்தியா வருகை

by Editor / 12-09-2021 11:57:32am
அமெரிக்க அதிபரின் துாதர் இன்று இந்தியா வருகை

அமெரிக்காவில் பருவ நிலைக்கான, அதிபரின் சிறப்பு துாதராக இருப்பவர் ஜான் கெர்ரி. இவர் இன்று இந்தியாவுக்கு வரவுள்ளார்.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்க அதிபரின் பருவ நிலைக்கான சிறப்பு துாதர் ஜான் கெர்ரி, செப்., 12 - 14 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் பருவ நிலை மாற்றத்தின் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கெர்ரி சந்தித்து பேச உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் நாட்டின் 'கார்பன்' வெளியேற்றும் அளவை 33 - 35 சதவீதம் அளவுக்கு குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைய இந்தியாவுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

 

Tags :

Share via