சென்னையில் தனியார் பேருந்துகள் - அமைச்சர் விளக்கம்

by Staff / 06-03-2023 05:03:16pm
சென்னையில் தனியார் பேருந்துகள் - அமைச்சர் விளக்கம்

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க எந்த முடிவும் செய்யப்படவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். உலக வங்கி அளித்துள்ள கருத்துரை தொடர்பாக ஆய்வு நடத்தவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசகர் நியமனம் செய்யபட்டு அறிக்கை பெறப்படும். அறிக்கையை ஆய்வு செய்து, மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சாதகமான முடிவுதான் எடுக்கப்படும். இந்த அறிக்கை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும். கூடுதல் பேருந்துகளை இயக்கத்தான் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் மக்களுக்கு கிடைக்கும் சலுகையில் எந்த பாதிபபும் இருக்காது என்றார்.

 

Tags :

Share via