by Editor /
11-07-2023
11:10:39pm
அதிமுக திருவாரூர் மாவட்டச் செயலாளராகவும், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ். இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 810 பக்க குற்றப்பத்திரிகை திருவாரூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர். மேலும், வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்த வழக்கில் இன்று விசாரணை முடிந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் அவரது நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார், மகன்களான இனியன், இன்பன் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகையுடன், 18,000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tags :
Share via