குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர பட்டேல்

by Editor / 13-09-2021 10:05:56am
குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர பட்டேல்

குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கும் பிரதமர் மோடி க்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நேற்று (செப்டம்பர் 11) முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் விஜய் ரூபானி. அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்ச்சர் நிதின் பட்டேல், கல்வித்துறை அமைச்சர் புபேந்தரசிங் சுடாஸமா, உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

குஜராத் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய் ரூபானியின் விலகல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் ரூபானியின் விலகலை தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. துணை முதலமைச்சராக பதவி வகித்த நிதின் பட்டேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ருபாலா, மாநில பாஜக தலைவராக உள்ள சி.ஆர் பட்டேல், கோர்தன் ஜடாஃபியா உள்ளிட்டோரில் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது.குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மத்திய பார்வையாளர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. தற்போது குஜராத்தின் முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸுக்கு முடிவு கிடைத்துள்ளது.
கட்லோதியா தொகுதி எம்.எல்.ஏவான பூபேந்திர பட்டேல் (வயது 55) குஜராத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் டிப்ளமோ பட்டயப்படிப்பு படித்து முடித்துள்ளார்.

 

Tags :

Share via