புதிய பாலம் கட்டி தர கோரி பொதுமக்கள் கண்ணில் கருப்பு கொடி கட்டி ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்

by Editor / 03-10-2022 11:19:42am
 புதிய பாலம் கட்டி தர கோரி பொதுமக்கள் கண்ணில் கருப்பு கொடி கட்டி ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்

மயிலாடுதுறை திருமஞ்சன வீதி காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள நடைபாலத்தின் ஒருபகுதி  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து இடிந்து விழுந்த நிலையில் புதிய நடைபாலம் அமைத்து தரக்கோரி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் புதிய பாலத்தை உடனடியாக கட்டித் தரக் கோரியும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி காவிரி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via