சிலையை விரைவில் மீட்க நடவடிக்கை

by Staff / 03-05-2023 04:16:08pm
சிலையை விரைவில் மீட்க நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தில் ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான விணாதார தக்ஷிணாமூர்த்தி உலோக சிலை 1970 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள லீவு லென்ட் அருங்காட்சியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 15 பேர் கோவிலில் விசாரணை நடத்தி சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
 

 

Tags :

Share via

More stories