சொகுசு காரில் சென்று கஞ்சா விற்பனை

by Staff / 24-11-2023 02:07:58pm
சொகுசு காரில் சென்று கஞ்சா விற்பனை

கடலூரைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். இவர் கஞ்சா விற்றதாக கூறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கோகுல கண்ணன் ஆந்திராவில் இருந்து முதல் தர கஞ்சாவை கடத்தி வந்து தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். அதிலும் குறிப்பாக சென்னையில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்துள்ளார். சொகுசு காரில் சென்று நேரடியாக விற்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்று கூறினர். கோகுல கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சாவும் ஆடி சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories