மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி.
மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று அதிகாலை மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், மன்மோகன் சிங் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.
Tags : மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி.