"நீட் தேர்வு ரத்து மசோதவை நடப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுக"
நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை, இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்றுமாறு மத்திய பாஜக கூட்டணி அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, "நீட் தேர்வை நாடாளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வு ஒழியும்வரை எங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Tags :