தென்காசியில் உடன்கட்டை ஏறுதல் சதிக்கல் கண்டெடுப்பு.

by Editor / 16-03-2025 11:00:09am
தென்காசியில் உடன்கட்டை ஏறுதல் சதிக்கல் கண்டெடுப்பு.

இந்தியாவில் கணவர் இறந்தால் மனைவியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. உடன்கட்டை ஏறும் பெண்ணின் நினைவாக சதிக்கல் நடப்பட்டன. இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவ மாணவிகள் தென்காசி ரயில் நிலையம் அருகே நேற்று(மார்ச் 15) சதிக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சதிக்கல் 200 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உடன்கட்டை ஏறுதல் பழக்கம் பல நூறு ஆண்டுகளுக்குமுன்னர் இருந்ததாற்கான வரலாற்று சான்றுகள் குற்றாலத்திலுள்ள அகழ்வைப்பகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தென்காசியில் உடன்கட்டை ஏறுதல் சதிக்கல் கண்டெடுப்பு.

Share via