மாநில அரசுகளுடன் ஆலோசித்திருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு

by Staff / 20-05-2023 12:21:07pm
மாநில அரசுகளுடன் ஆலோசித்திருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு

2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னாசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு, 'இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் ஆலோசித்து அறிவிக்க வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பாதித்தது' என்றார். 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo