தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

by Admin / 22-06-2026 11:14:54pm
தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவுமதுரை மாநகர காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன் சேலம் மாநகர காவல் ஆணையராக ஜோசி நிர்மல் குமார் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ராஜேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் தமிழக காவல் தலைமை கூடுதல் டிஜிபியாக ஆயுஷ் மணி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதோடு கபில்குமார் சி சரத்கர் சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராகவும் பி சாமுண்டீஸ்வரி சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையராகவும் ஏ ஜி பாபு சென்னை பெருநகர காவல் தலைமையக கூடுதல் காவல் ஆணையராகவும் தேன்மொழி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராகவும் பிரவேஷ்குமார் கடலோர பாதுகாப்புக் குழும ஐஜியாகவும் அனில் குமார் கிரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐசியாகவும் எஃப் கார்த்திகேயன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி ஆகவும் மகேஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ. ஜியாகவும் ராதிகா சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி ஆகவும் துறை குமார் சென்னை பணியாளர் பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via
Logo