குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்  தசரா திருவிழா நாளை துவக்கம் அம்மனுக்கு காளி பூஜை 

by Editor / 02-10-2024 01:06:21pm
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்  தசரா திருவிழா நாளை துவக்கம் அம்மனுக்கு காளி பூஜை 

புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்கி வருகிற 12ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
 ஒவ்வொரு நாளும் அம்மன் துர்க்கை அம்மன் திருக்கோலம், விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலம், பார்வதி திருக்கோலம், பாலசுப்பிரமணியர் திருக்கோலம், நவநீத கிருஷ்ணர் திருக்கோலம், மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம் உள்ளிட்ட பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெருகிறது. முக்கிய திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி வருகிற 12 தேதி நள்ளிரவில் கோவில் கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழா நாளை துவங்குவதையொட்டி அம்மனுக்கு காளி பூஜையானது இன்று தொடங்கியது.இதற்காக அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து கோவில் முன்பு காளி பூஜையை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. இதில் மாலை அணிந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தசரா குழுவினர்களால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் சித்தி விநாயகர், நாககன்னியம்மன் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனுக்கு பால், பழம், பன்னீர் தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
 

 

Tags : குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்  தசரா திருவிழா நாளை துவக்கம் அம்மனுக்கு காளி பூஜை 

Share via