உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி 262 பேர் கடிதம்

by Staff / 05-09-2023 04:11:38pm
உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி 262 பேர் கடிதம்

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபலங்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via