குழந்தையை தரையில் தூக்கி அடித்த தந்தை கைது
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு 2020 இல் திருமணம் நடந்தது. அன்று முதல் கணவனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற அவர், மனைவியுடன் தகராறு செய்து குழந்தையை தரையில் தூக்கி வீசியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து வந்து குற்றவாளியான குழந்தையின் தந்தையை கைது செய்தனர். தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :