ஹிந்தியை யாரும் திணிக்கவில்லை - வானதி

by Staff / 03-03-2025 01:36:24pm
ஹிந்தியை யாரும் திணிக்கவில்லை - வானதி

வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கத் துறைகளில் பல்வேறு மாற்றங்களை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார். அதே போல பிரதமர் மோடி கல்வித் துறை வழியாக ஒரு மாற்றத்தை கொண்டு வர நினைக்கிறார். இந்த மாற்றம் என்பது புதிதான மாற்றம் அல்ல, ஏற்கனவே தனியார் பள்ளிகள் வசதி வாய்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு பல்வேறு மொழிகளை கற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அரசாங்க பள்ளி மாணவர்கள் தற்போது வரை இரண்டு மொழி மட்டுமே கற்றுக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் அந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், இது கட்டாயமும் அல்ல. ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் ஒருமுறை பொது மக்களை திசை திருப்ப முயல்கிறது. இந்தி என்பது இங்கு நிச்சயமாக கட்டாயம் அல்ல, இங்கு இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற பிம்பத்தை முதலமைச்சர் மற்றும் மற்ற தலைவர்களும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது உண்மையல்ல ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளை கற்று வருகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு அரசாங்க பள்ளி, ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டும் தான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்று கூறினார்.

 

Tags :

Share via