புதிய கைத்துப்பாக்கி வாங்கவோ, விற்க தடை

by Staff / 22-10-2022 04:35:11pm
புதிய கைத்துப்பாக்கி  வாங்கவோ, விற்க தடை

கனடா நாடாளுமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதித்து வருகின்றனர். புதிய கைத்துப்பாக்கி முடக்கம் ஒரு "உடனடி நடவடிக்கை" என்று ட்ரூடோ நிர்வாகம் கூறிவந்தது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "மக்கள் கொல்லப்படும்போது, ​​மக்கள் பாதிக்கப்படும்போது, நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். துப்பாக்கிகள் சம்பந்தமாக மீண்டும் பல கொடூரமான சம்பவங்களை பார்த்திருக்கிறோம். மக்கள் இனி கனடாவிற்குள் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. மேலும் அவர்கள் புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டு வர முடியாது" என்று வெளியிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via