கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஆஸ்கர் விருது குழுவில் இணைந்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். இது உங்களுக்கு கிடைத்த தாமதமான அங்கீகாரமே ஆகும். இன்னும் பல உயரங்கள் தங்களை தேடி வரும்" என கூறியுள்ளார்.
Tags :