போதைப்பொருள் விற்ற 2 பெண்கள் கைது

சத்தியில் பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரிலிருந்து குட்கா எனும் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி வருவதாக சத்தியில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சத்தி பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோபி பஸ் நிற்கும் இடத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பெண்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோபியைச் சேர்ந்த புவனேஸ்வரி (45), வசந்தமணி (47) என தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த 3 பேக்குகளை போலீசார் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags :