குணா குகை பகுதியில் அத்துமீறி ரீல்ஸ்.. ரூ.10,000 அபராதம்

by Editor / 28-06-2025 01:14:27pm
குணா குகை பகுதியில் அத்துமீறி ரீல்ஸ்.. ரூ.10,000 அபராதம்

கொடைக்கானல் குணா குகை பகுதியில், தடையை மீறி ரீல்ஸ் எடுத்த இளைஞருக்கு வனத்துறை ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் கம்பிகள் வைக்கப்பட்டிருந்தும், அவற்றை மீறி அவர் உள்ளே சென்றது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவரை வனத்துறை அதிகாரிகள் அழைத்து கண்டிப்புடன் எச்சரித்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளை மீறவேண்டாம் எனவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

 

Tags :

Share via