by Staff /
03-07-2023
04:50:02pm
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் ஜோஸ் பெனடிக் (17). இச்சிறுவன் தனது வீட்டில் விறகு அடுப்பு எரிக்கும் போது, திடீரென அடுப்பு வெடித்ததில் நெருப்பு மற்றும் சுடு தண்ணீர் பட்டதில் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை மீட்ட குடும்பத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார்.
Tags :
Share via