நீட் தேர்வு. மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுவது தவறு - ராகுல்காந்தி

by Editor / 07-09-2021 10:01:18am
நீட் தேர்வு. மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுவது தவறு - ராகுல்காந்தி

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

நடப்பாண்டிற்கான மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஜூலை 13-ஆம் விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 13 ஆம் தேதியோடு விண்ணப்பங்கள் நிறைவு பெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா காலக்கட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்த குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஒரு சில மாணவர்களின் கோரிக்கைக்காக தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது. திட்டமிட்டபடி நீட்தேர்வு நடந்தே தீரும் என அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம், திட்டமிட்டபடி செப்.12ம் தேதி நீட் தேர்வு நடக்கவிருப்பது உறுதியானது.

 

Tags :

Share via