ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

by Editor / 19-07-2025 05:07:07pm
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

பகுதி நேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். "பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, தனது தேர்தல் வாக்குறுதி எண் 181ல் கூறிய திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது. ஒவ்வொரு முறை ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கும்போதும், பொய்யான நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுகிறது" என்றார்.

 

Tags :

Share via