சிவகாசியில் பட்டாசு தயாரித்தபோது விபத்து.. 3 பேர் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பொன்னு பாண்டியன் என்பவர் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது இக்கோர விபத்து நடந்துள்ளது. இதில் ஜெகதீஸ்வரன், முத்துலட்சுமி, சண்முகத்தாய் ஆகிய மூவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பொன்னு பாண்டியன், மாரியம்மாள் ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
Tags :