4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு பட்டா - முதலமைச்சர் பெருமிதம்

by Editor / 09-08-2025 01:08:07pm
4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு பட்டா - முதலமைச்சர் பெருமிதம்

4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 5 மாதங்களில் மட்டும் 7.27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 5 மாதங்களில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டேன். பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via