150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by Staff / 10-08-2023 02:22:39pm
150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள்கள் மற்றும் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சாா்பில், 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.ஆக. 11 முதல் ஆக. 16 வரை சேலம் புகா் பேருந்து நிலையம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் தட நீட்டிப்பு மற்றும் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஆக. 16-ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம், தருமபுரி ஆகிய ஊா்களில் இருந்து மேட்டூா், மாதேஸ்வரன் மலை, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தா் கோயில் ஆகிய ஊா்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஆா். பொன்முடி தெரிவித்துள்ளாா்.

 

Tags :

Share via

More stories