பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.

by Admin / 29-08-2026 09:29:28am
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்மோடி, ஆகஸ்ட் 30 வரை தலைநகர் தாஷ்கண்டில் தங்கி, அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் உடன் இணைந்து வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எண்ம இணைப்பு எரிசக்தி மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைநடத்துகிறாா். 

இந்தியாவின் ‘விக்சித் பாரத் 2047’ மற்றும் உஸ்பெகிஸ்தானின் ‘உஸ்பெகிஸ்தான்-2030’ ஆகிய நீண்ட கால தொலைநோக்குத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது பற்றி இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். தாஷ்கண்டிலுள்ள முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடம் மற்றும் தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள மகாத்மா காந்தி மையம் ஆகிய இடங்களுக்குப் பிரதமர் நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார்.

உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை கிர்கிஸ்தான் நாட்டின் பிஸ்கேக் நகருக்கு செல்லவிருக்கிறார். அங்கு நடைபெறும் 26-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் , சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

 

Tags :

Share via
Logo