கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

நீலகிரி மாவட்டம், எடுகாட்டி, தோட்டானி பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் தனுஷ் (18). இவர் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பகுதியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் இவர், நேற்று காலை தனது நண்பர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு செல்லாமல், மீண்டும் ரூமுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வகுப்புக்கு வராததால் சக மாணவர்கள் சந்தேகம் அடைந்து ரூமுக்கு வந்து பார்த்தபோது, ரூமில் உள்ள ஃபேனில் தூக்கு போட்டு தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தனுஷை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி ஹாஸ்டலில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags :