ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு

இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. டெஹ்ரானில் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியத் தூதரகம் பாதுகாப்பு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Tags :