ஓபிஎஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ஓபிஎஸ் வெற்றி பெற்றார். அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அப்பாவு கூறுகையில், "ஓபிஎஸ் மீது பேரவை விதிகளின்படி ஆய்வு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக நிர்வாகிகளோ, கொறடாவோ அவருக்கு எதிராக புகார் அளிக்கவில்லை" என்றார்.
Tags :