,நாங்கள் ஒரு அமைதியான தீர்வை விரும்புகிறோம்.- ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் தாலிபான் தலைவருமான அமீர்கான் முத்தாகி

பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் இடையில் நடந்த சண்டையில் 58 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது.. டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதகரத்தில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் தாலிபான் தலைவருமான அமீர்கான் முத்தாகி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. முன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த சந்திப்பில் பெரும்பான்மையான பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.. தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான போராளிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருடன் மோதி பல எல்லைச்சாவடிகளை கைப்பற்றி 58 பாகிஸ்தான் வீரர்களை கொன்ற சில மணி நேரங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் வெளியுறவுஅமைச்சர் முத்தாகி ,நாங்கள் ஒரு அமைதியான தீர்வை விரும்புகிறோம். ஆனால் ,அமைதி முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றால் எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன. டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முத்தாகி பாகிஸ்தானுக்கு ஒரு கடுமையான செய்தியை வெளியிட்டார்.. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் கொள்கை அனைத்து பிரச்சனைகளையும் விவாதம் மற்றும் புரிதல் மூலம் தீர்ப்பாதற்கும் பதற்றம் இல்லாத சூழ்நிலை நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் அதை விரும்பவில்லை என்றால் ஆப்கானிஸ்தானுக்கு வேறு வழிகள் உள்ளன என்றும் எச்சரிக்கை விடுத்தார். .இத்துடன் பாகிஸ்தான் மக்களோடும் அரசாங்கத்துடனும் எங்களுக்கு நல்ல உறவுகள் உள்ளன .ஆனால், அந்த நாட்டில் உள்ள சிலர் பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கின்றன என்றும் முத்தாகி தெரிவித்தார்.. பாகிஸ்தான் அமைதிய விரும்பினால் அவர்களிடம் பெரிய இராணுவமும் சிறந்த உளவுத்துறையும் இருந்தால் அவர்கள் ஏன் அதை கட்டுப்படுத்தவில்லை.. எங்களை குறை கூறுவதற்கு பதிலாக அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள பிரச்சனைகளை கட்டுப்படுத்த வேண்டும்... பாகிஸ்தான் ஏன் தனது மக்கள்மீது நம்பிக்கை வைக்கவில்லை.. நாமும் சண்டையை விரும்பவில்லை. .பாகிஸ்தான் இந்த குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.. 40 ஆண்டு கால மோதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.
..தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது, இதை அது உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகளுக்கு பதிலடியாக இது நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இரவு முழுவதும் பாகிஸ்தான் இராணுவ நிலைகளைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தனர்,
Tags :