மத்திய ஆப்பிரிக்க நாடான கேம ரூன் அதிபர் தேர்தல் பால் பியா 92 வயதில் களத்தில் உள்ளார்,

மத்திய ஆப்பிரிக்க நாடான கேம ரூன் அதிபர் தேர்தலை சந்தித்துள்ளது.. ,எட்டாவது முறையாக போட்டியிட்டுள்ள பியா தனது 92 ஆவது வயதில் களத்தில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு கேமரூனில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. உலகின் மூத்த அரசியல்வாதியான பால் பியா 92 வயதில் களத்தில் உள்ளார் இவருக்கு எதிராக மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக தேர்தல் களத்தில் இருந்தாலும் 43 ஆண்டுகள் அதிகாரப்பிடியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பியா தொடர்ந்து நீடிப்பார் என்கிற கருத்து வலுப்பெற்றுள்ளது
.. 1982 முதல் ஆட்சியில் இருக்கும் வியா அரசு நிறுவனங்களின் மீதான தன் உறுதியான கட்டுப்பாட்டை வைத்திருப்பதால் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியை வலுவிழக்கச் செய்ததின் காரணமாக மீண்டும் அவர் தம் பதவியை தக்க வைத்துக் கொள்வார் என்றே பரவலாக பேசப்படுகின்றது.. எட்டு மில்லியனுக்கும் அதிகமான கேம ரூனியர்கள் வாக்களிப்பதற்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது., வாக்கு நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தொடர்ந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்த வண்ணம் இருந்தனர். இன்னும் 15 நாளில் முடிவுகள் தெரியும்.. 30 மில்லியன் மக்கள் வசிக்கும் மத்திய ஆப்பிரிக்க நாடான, இதில் எண்ணெய் மற்றும் கோகோ உற்பத்தி தான் பொருளாதாரமாக திகழ்கிறது.. பல ஆண்டுகளாக ஒரு தேக்கமான சூழ்நிலையிலே நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.. எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் இந்தத் தேர்தல் தேசத்தை மாற்றமான ஒரு நிலைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கின்றனர்.. வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அரசியல் அமைப்பு கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட முடிவுகள் வாக்குச் சீட்டில் இருந்து பெரும் முடிவுகளை பிரதிபலிப்பதாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த டிச்சி ரோமா கூறியுள்ளார்.. 2008 ஆம் ஆண்டு முதல் பியா தனது பதவிக்கால வரம்புகளை நீக்கி நீண்ட காலமாக அதிகாரத்தில் இருந்து வருகிறார்..

Tags :