காகிதம், மை தட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து
இலங்கையில் காகிதம், மை இறக்குமதி செய்ய தேவையான டாலர் கையிருப்பு இல்லாததால், பள்ளி மாணவர்களின் தவணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதனால் தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் திங்கட்கிழமை தொடங்க இருந்த தவணை தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள 4.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
22 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறை உள்ள இலங்கையில் இந்த வாரம் தனது மோசமடைந்து வரும் வெளிநாட்டுக் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்காக அண்டை நாடுகளில் கடன் வாங்க நாடுவதாக அறிவித்தது.
கொழும்புவின் கடனில் சுமார் 6.9 பில்லியன் டாலர் இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டும். ஆனால் அதன் டாலர் கையிருப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெறும் 2.3 டாலர் பில்லியனாக மட்டுமே இருந்தது.
Tags :



















