தமிழ்நாடு கலவர பூமியாக ஒருபோதும் மாறாது: கி.வீரமணி

by Staff / 27-10-2023 03:24:32pm
தமிழ்நாடு கலவர பூமியாக ஒருபோதும் மாறாது: கி.வீரமணி

தமிழ்நாடு என்றும் அமைதிப் பூங்காவாகவே இருக்கும், இது கலவர பூமியாக ஒருபோதும் மாறாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நெருங்க நெருங்க, இப்படிப்பட்ட வித்தைகள், பழிதூற்றல் மேலும் மேலும் உருவாக்கப்படும். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று போலி ஒப்பாரி, பொய் அழுகை செய்கின்றார்கள் என்று விமர்சித்தார். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை, சாலையில்தான் குற்றவாளி கருக்கா வினோத் வீசினான் என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo