வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு - சீமான் வலியுறுத்தல்

by Staff / 27-10-2023 03:44:25pm
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு - சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்-ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று மதுபோதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழ்நாடு காவலர்களை வட மாநிலத்தவர் கட்டையாலும், கற்களாலும் கடுமையாகத் தாக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை் பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via