திமுக எம்.எல்.ஏ.ராஜா மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில்  கருத்துக்களை கூறியதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

by Editor / 10-02-2024 11:02:01am
திமுக எம்.எல்.ஏ.ராஜா மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில்  கருத்துக்களை கூறியதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் நடைபெற்ற  நகர் மன்ற கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவியை பார்த்து  எழுப்பிய கேள்விக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில்  கருத்துக்களை கூறியதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 4 மாத நீண்ட போராட்டத்திற்கு பின்னர் நகர்மன்ற கூட்டம் திமுக நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களின் வார்டு மக்களின் தேவைகளை குறித்து நகர்மன்ற தலைவியை நோக்கி கேள்வி எழுப்பிய போது இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் அடிக்கடி இடைமறித்து தேவையற்ற கருத்துக்களை கூறியதாகவும் , கற் சிலையை வைத்து விட்டால் அந்த இடம் கோவிலாகுமா என்று மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் கருத்து கூறியதைக் கண்டித்து அதிமுக மன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு  கண்டனத்தை தெரிவித்தனர் . மேலும் சங்கரன்கோவில் நகராட்சி ஆனது 25 கோடி ரூபாய்க்கு மேல் கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் இருப்பதால்  வார்டு மக்களின் சிறிய அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் நகர்மன்ற உறுப்பினர்கள் திணறுவதாக கருத்து தெரிவித்த அதிமுகவின் நகர்மன்ற துணைத் தலைவரை அவர்களை பேசவிடாமல் தடுத்த நகர்மன்ற தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாரு வெளி நடப்பு செய்தனர்..

திமுக எம்.எல்.ஏ.ராஜா மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில்  கருத்துக்களை கூறியதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.
 

Tags : திமுக எம்.எல்.ஏ.ராஜா மத நம்பிக்கையை புண்படுத்தும் கருத்துக்களை கூறிய

Share via