தென்காசி வழியாக மும்பை, டெல்லிக்கு ரயில்கள் இயக்கபாஜக நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நேரில் மனு. 

by Editor / 10-02-2024 10:49:59am
தென்காசி வழியாக மும்பை, டெல்லிக்கு ரயில்கள் இயக்கபாஜக நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நேரில் மனு. 

 டெல்லியில் இருந்து மதுரை வரை செல்லும் சம்பர்க் கிராந்தி ரயிலை தென்காசி வழியாக நெல்லைக்கும், மும்பையில் இருந்து பெங்களூர் வழியாக நெல்லை வரை செல்லும்  சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை தென்காசி வழியாக செங்கோட்டை வரை இயக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளriடம் மனு அளித்துள்ளனர். 

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர்  மருது பாண்டியன் மற்றும் பாஜக தொழில் பிரிவு மாநில செயலாளர்  அருணாச்சலம் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நேரில் அளித்துள்ள மனுவில்,
வண்டி எண் 11021/11022 மும்பை - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட வேண்டும். இது மும்பை மற்றும் பெங்களூருக்கு நேரடி இரயில் தொடர்பை ஏற்படுத்த வழிவகுக்கும்.

 12651/52 தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ராஜபாளையம் தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும்.

 பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை இரவு  7.30 க்கு பின் புறப்படும் வகையிலும் கொல்லம் எக்ஸ்பிரஸ் இரவு 6.30 மணிக்கு தென்காசி வழியாக புறப்படும் வகையிலும் மாற்றி அமைக்க வேண்டும். 

தென்காசி மற்றும் செங்கோட்டை நகரங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய தலைநகரங்களாகும். மேலும்  இந்துக்களின்  முக்கியமான புனித  யாத்திரை ஸ்தலமாகிய  புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலும் இங்கு உள்ளது. 
இருப்பினும் இந்தப்பகுதியில் இருந்து  முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் இணைப்புகள்  இன்றளவும் இல்லை .

மேலும் தென்காசிக்கு அருகிலுள்ள  தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம்  நீர்வீழ்ச்சி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும், இருப்பினும் இணைப்பு இல்லாததால் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பின்னடைவாகஉள்ளது.

16102 கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் வரும் நேரத்தை காலை 7:45 மணிக்கும்  (பழைய அனந்தபுரி இரயிலின் நேரம்) மற்றும் 16101 சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் நேரம் சென்னை எழும்பூரில் இருந்து 18:30 மணிக்கு புறப்படும் வகையிலும்   (பழைய திருக்குறள் விரைவு இரயிலின் நேரம்), 
12662  செங்கோட்டை-சென்னை பொதிகை  எக்ஸ்பிரஸ் ரயிலை இரவு 7.30 க்கு மேல் புறப்படும் வகையில் மாற்ற வேண்டும். 
 இதனால் 16847 மயிலாடுதுறை -  செங்கோட்டை   எக்ஸ்பிரஸ் ராஜபாளையத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் அவசியம் இருக்காது.

 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயிலை திருப்பூர் வழியாக ஈரோடு வரை நீட்டித்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும்

  தென் மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள்  ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையில் பணிபுரிந்து வருவதால், இந்த தினசரி ரயில்  உதவியாக இருக்கும்.

மேலும் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் மற்றும் தென்காசியில் ஏராளமான தொழில் மற்றும் சுற்றுலாத்  தலங்கள் இருப்பதால் இரு தரப்பு மக்களுக்கும் இந்த ரயில்  மிகவும் உதவியாக இருக்கும்.

 விருதுநகர்- செங்கோட்டை ,திருநெல்வேலி  -செங்கோட்டை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : தென்காசி வழியாக மும்பை, டெல்லிக்கு ரயில்கள் இயக்கபாஜக நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நேரில் மனு. 

Share via